“ஜேஇஇ தேர்வு எழுதி வெற்றி பெற்றதால் திருச்சி என்.ஐ.டியில் படிக்கும் நல்வாய்ப்பு கிடைத்துள்ளது” என பழங்குடியின மாணவி ரோஹிணி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சைமலை, சின்ன இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ரோஹிணி சமீபத்தில் நடைபெற்ற ஜேஇஇ தேர்வில் 73.8 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
60 ஆண்டுகளுக்கு பிறகு பழங்குடியினத்தை சேர்ந்த மாணவி ரோஹிணி ஜேஇஇ தேர்வில் தேர்வாகி உள்ளார். மேலும், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற ரோகிணி என்ஐடியில் படிக்கும் வாய்ப்பையு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.