90’s கிட்ஸ்களின் விருப்பமான சேனலான கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்ட்டூன் நெட்வொர்க் கடந்த 1992-ம் ஆண்டு அமெரிக்காவின் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
30 வருடங்களுக்கும் மேலாக குழந்தைகளின் விருப்பமான சேனலாக கார்ட்டூன் நெட்வொர்க் இருந்து வருகிறது. இந்நிலையில் சேனல் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியதால் 90’s கிட்ஸ்கள் சோகமடைந்துள்ளனர்.
மேலும் RIP CARTOON NETWORK என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.