பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித அவர், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களுக்கு காரணம் அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கமும், மது மற்றும் கள்ளச்சாராய விற்பனையுமே என குற்றம் சாட்டினார்.