நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பணத்தகராறில் ரியல் எஸ்டேட் புரோக்கரின் கார், வீடு உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.
செம்பாம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், பாலு ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் செல்வத்தின் வீட்டிற்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல், கொலை மிரட்டல் விடுத்ததுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்டவற்றையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.