பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கரூர் காவல்துறைக்கு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் என்பவர், தனது பிரியாணி கடையை சவுக்கு யூடியூப் சேனலில் பிரபலப்படுத்துவதற்காக, சேனலில் பணியாற்றிய சென்னையைச் சேர்ந்த விக்னேஷ், 7 லட்சம் ரூபாய் பணம் பெற்று விட்டு ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து விக்னேஷிடம் போலீசார் விசாரித்தபோது, சவுக்கு சங்கரிடம் பணத்தை வழங்கியதாக வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கரூர் போலீசார் அனுமதி கேட்ட நிலையில், 4 நாட்கள் மட்டும் அனுமதி அளித்து நீதிபதி பரத்குமார் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.