மிரட்டும் முத்தக் காய்ச்சல் எச்சரிக்கும் மருத்துவர்கள்!
Oct 18, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிரட்டும் முத்தக் காய்ச்சல் எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 11:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

35 வயதுக்குட்பட்ட அமெரிக்கர்களில் 90 விழுக்காடு பேர் முத்த காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அது என்ன முத்த காய்ச்சல்? விரிவாக பார்க்கலாம்.

முத்தம்… அன்பை வெளிப்படுத்தும் ஒரு வழி… கொடுப்பவருக்கும் பெற்றுக்கொள்பவருக்கும் இடையிலான உறவை பொறுத்து முத்தத்தின் அர்த்தம் சில நேரங்களில் மாறுபடுவதுண்டு. அதைக்குறிக்கும் வகையில் நா.முத்துக்குமார் திரைப்பட பாடல் ஒன்றில் “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று” என எழுதியிருப்பார்.

அன்பை பரிமாறிக்கொள்ள முத்தமிடுவது பரவலாக பின்பற்றுப்படுகிறது. மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் கூட முத்தமிட்டு கொள்கின்றன. அப்படிப்பட்ட முத்தம் மூலம் ஒரு காய்ச்சல் பரவுகிறது என்பதே இங்கு பிரச்னை.

பிரிட்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மதுக்கூடத்தில் தான் சந்தித்த நபருக்கு முத்தம் கொடுத்தார். அதைத்தொடர்ந்து கடுமையான தொண்டை வலி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட அவர், உடல் பலவீனமடைந்து நடக்கவே முடியாத நிலைக்குச் சென்றார்.

அதே போல் பிரபல பிரிட்டன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகை VICKY PATTISON-க்கும் இதே நிலை ஏற்பட்டது. இவர்கள் இருவரும் பாதிக்கப்பட்டது முத்த காய்ச்சலால்…

1920-ஆம் ஆண்டு வாக்கிலேயே கண்டறியப்பட்டதாக கூறப்பட்டாலும் முத்த காய்ச்சல் இப்போதுதான் பரவலாக அறியப்படுகிறது. முத்த நோயின் மருத்துவப்பெயர் INFECTIOUS MONONUCLEOSIS. முத்தமிடும் போது அதிகம் பரவுவதால் இது KISSING DISEASE என்று அழைக்கப்படுகிறது. உமிழ்நீர் மூலம் பரவும் EPSTEIN – BARR VIRUS முத்த நோயை ஏற்படுத்துகிறது. இதற்கு GLANUDLAR FEVER என்ற பெயரும் உண்டு. ரத்தம், இருமல், பாதிக்கப்பட்டவர் உபயோகப்படுத்திய கோப்பை மற்றும் பிரஷ்ஷை பயன்படுத்துவது போன்றவற்றாலும் இந்தத் தொற்று பரவுகிறது.

தலைவலி, அதிக உடல்சோர்வு, தொண்டையில் புண் அல்லது வலி, கழுத்துப்பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுகள் பெரிதாவது, உடலில் ஆங்காங்கே சிவந்து போவது உள்ளிட்டவை இந்நோயின் முக்கிய அறிகுறிகள். பாதிக்கப்பட்டவர் குணமடைய 2 முதல் 4 வாரங்கள் வரை தேவைப்படும்.

EBV தொற்றுக்கு வழக்கமான காய்ச்சலுக்கான சிகிச்சைகள், வலிநிவாரணிகள், போதுமான ஓய்வு, திரவ உணவுகளை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்வது என பாதிப்பை பொறுத்து சிகிச்சைகள் வழங்கப்படும்.

முத்தம் என்பது அன்பை பரிமாறத்தான் என்றாலும் நிறைய பேரிடம் அந்த அணுகுமுறையை பின்பற்றாமல் கொஞ்சம் அளவாக பரிமாறினால் முத்த காய்ச்சலில் இருந்து தப்பலாம்.

Tags: Threatening kissing fever doctors warn!
Share
Tweet
SendShare
Previous Post

பாடகியின் கனவை நிறைவேற்றிய நெப்போலியன்!

Next Post

பில்லூர் அணையை தூர்வாரும் பணி தொடக்கம்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies