ஒரு சிறு பூச்சியின் விலை 75 லட்சம் ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அது உண்மைதான். அப்படியா அது என்ன பூச்சி என்று கேட்பவர்களுக்கான தொகுப்பே இது.
பார்ப்பதற்கு அடர்ந்த காடுகளில் எடுக்கப்பட்ட ஆங்கிலப் படங்களில் வரும் பூச்சி போல இருக்கும் இதன் பெயர் தேன் வண்டு. இதன் பலமான தாடைகள் பூச்சி ஆர்வலர்கள் மத்தியில் பிரபலம். ஆண் தேன் வண்டுகள் 4 முதல் 9 சென்டிமீட்டர் நீளமும், பெண் தேன் வண்டுகள் 3 முதல் 4 சென்டிமீட்டர் நீளமும் கொண்டவை.
இவற்றின் ஆயுட்காலம் 3 முதல் 7 ஆண்டுகள். பெண் தேன் வண்டின் தாடைகள் சிறியதாக இருப்பதால் அவற்றை கண்டறிவதில் சில சமயம் சிக்கல் ஏற்படும். எது எப்படி இருந்தாலும் தேன் வண்டின் விலை 75 லட்சம் ரூபாய். அதாவது BMW, AUDI உள்ளிட்ட சொகுசு கார்களைவிட அதிகம். இதுதான் உலகிலேயே மிக உயர்ந்த விலை கொண்ட பூச்சி என்று கூறப்படுகிறது.
இவ்வளவு பணம் கொடுத்து வாங்குவதற்கு இந்த தேன் வண்டில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டால், அதன் மருத்துவ குணங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.
சூழலியல் சமன்பாட்டிலும் இந்த தேன் வண்டுக்கு பெரிய பங்கிருப்பதாக சொல்கிறார்கள். அதைவிட முக்கியமான காரணம்… இந்த தேன் வண்டை வாங்கினால் விரைவில் பெரும் பணக்காரர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கை. இது ஒன்று போதாதா? என்ன விலைக்கு வேண்டுமானாலும் விற்கலாமே? வாங்குவதற்கு ஆட்களா இல்லை???
இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் தேன் வண்டும் சூழலியல் சமன்பாடும் எப்படி பிழைத்திருக்கப் போகிறதோ தெரியவில்லை