தமிழ் திரையுலகில் தமது காந்த குரல்வளத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சித் ஸ்ரீராம். நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்து வரும் அவரை பற்றி தற்போது பார்க்கலாம்
சில பேரோட குரல் மட்டும் தான் யாரு இந்த பாட்ட பாடிருக்கான்னு திரும்பி பார்க்க வைக்கும். டிஎம்எஸ்,எஸ்பிபி, ஏசுதாஸ்ன்னு தனித்துவமா அவுங்களுக்குன்னு ரசிகர்கள் இருக்காங்க.
அந்த வகையில இவரு 2கே கிட்ஸ்க்கு கிடச்ச வரம்ன்னே சொல்லலாம். அவரு தான் சித் ஸ்ரீராம்.
ஆரம்பத்துல நண்பர்களோட சேர்ந்து கவர் ஸாங்க்ஸ் யூடியூப்ல பன்னிட்டு இருக்கும் போது நல்ல வரவேற்பு இருந்தது. இந்த யூடியூப் லிங்க ரஹ்மானுக்கு அனுப்ப அங்க தான் வாய்ப்பு கிடைக்கிது சித்துக்கு. அப்படி கடல் படத்துல இருக்குற அடியே பாட்ட ஸ்கைப்பிலேயே பதிவு செஞ்சுருக்காங்க.
ஆனா அடியே பாட்டுக்கு மல்டிபிள் கமெண்ட்ஸ் கடைக்கிது. என்ன குரல் இது இழுவையா இருக்கு குரல் பெருசா இசையோட ஒட்டலையே அப்படி இப்படின்னு. அதுக்கு பின்ன ஐ படத்துல இருந்த என்னோட நீ இருந்தால் பாட்டு செம்ம தூள் ஹிட் அடிக்கிது. அங்க சித்துக்கு எகிறுது மார்க்கெட்.
அந்த காலத்துல படம் நல்லா இல்லனாலு பாட்டுக்காக படத்த பாக்க மக்கள் திரளுவாங்க அப்படி பல காலங்களுக்கு பிறகு ஒரு பாட்டு படத்துக்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங்க தர முடியும்ன்றத காட்டுனது இன்கேம் இன்கேம் பாட்டு.
எஸ்.பி.பி, யேசுதாஸ் இவங்களோட குரல்ல ஒரு ஒழுக்கம் இருக்கும். இசையோட மெட்டின் எல்லைக்கு தட்டி போகும். சித் ஸ்ரீராம்மோட குரல் அப்படி இல்ல கொஞ்சம் பிசிறு தான். இதே மாதிரி உதித் நாராயணன் மாதிரியான சில குரலுக்கும் இந்தத் தன்மை இருக்கும். ஆனா அவங்களுக்கெல்லாம் இத்தன பாடல்கள் பாடும் வாய்ப்பை இந்த இசையுலகம் கொடுக்கல. சித் ஸ்ரீராமின் குரலுக்கு இருக்கும் வசீகரம் இன்னும் அதிகம் என்பதும் உண்மை.
அடுத்து அடுத்து பாடல்கள் பாட சித்துக்குன்னு ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க ஆரம்பிச்சுச்சு. ஒரு காலகட்டத்துல எல்லா படங்களுக்கும் மணிவண்ணனின்,வடிவேலு கால்ஷீட் வாங்கிடுவாங்க. படம் எப்படியிருந்தாலும் காமெடி கரைசேர்ககும்ன்ற நம்பிக்க. இசைக் கோணத்துல பாத்தா கொஞ்ச நாளைக்கி முன்னாடி வர சிம்புவ வச்சு ஏதாது ஒரு பாட்ட பாடவெச்சாங்க. ஆனா அந்த ட்ரெண்டு மாறி சின்ன படங்களுக்கு கவனத்த ஈர்க்க சித் ஸ்ரீராமோட குரல் உதவ ஆரம்பிச்சிது.
அஜித்துக்கு செண்டிமெண்ட் சூர்யா,விஜய்க்கு காதல்… சிவகார்த்திகேயனுக்கு அண்ணன் செண்டிமெண்ட், தனுஷூக்கு லவ் பெயிலியர்ன்னு ஒவ்வொரு நடிக்கர்களோட பெஸ்ட் சாங்க்ஸ்சா அமஞ்சுபோச்சு
சித் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பாட்டு ஏனோ தானோ இல்ல, சூப்பர் டூப்பர்த்தான் ‘அந்தி மாலை நேரம்… ஆற்றங்கரை ஓரம்…’ என்று நம்ம மனசுல நிலவைக் காய விடுறாரு சித்து.