ஐ.ஓ.சி நிர்வாகத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, தண்டையார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களுடன் சேர்ந்து பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களை சார்ந்த லாரிகளும் போராட்டத்தில் ஈடுபடும் எனவும் லாரி உரிமையாளர்கள் கூறினர். வேலை நிறுத்தம் காரணமாக ஏராளமான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.