கால்நடைகளால் ஏற்படும் ஆபத்தை கூட கட்டுப்படுத்த இயலாத திறமையற்ற அரசாக திமுக அரசு உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில், சமூக விரோதிகளால் மட்டுமல்லாது, கால்நடைகளாலும் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டில், சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுமார் 6 ஆயிரம் பேர் நாய் கடித்ததன் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
எனவே பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் விலங்குகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கைவாயிலாக தெரிவித்துள்ளார்.