ரஷ்யாவின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ரஷ்யாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் அப்போஸ்ஸல்’ விருதுபெற்ற பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பாகவும், மக்கள் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை வளர்ப்பதில் சிறப்பாக செயலாற்றியதற்காக இந்த விருது பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.