திருச்சி ரயில் நிலையத்திற்கு உரிய ஆவணங்களின்றி கைப்பையில் எடுத்து வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சென்னையில் இருந்து வந்த லட்சுமணன் என்பவரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா கும்பலுக்குச் சொந்தமானதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.