மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளுக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பூம்புகார் மீனவ கிராமத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
அதன்பேரில், நாகை மீன்வளத்துறை இயக்குனர் இளம்வழுதி தலைமையிலான அதிகாரிகள், பூம்புகார் துறைமுகத்தில் சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய முயன்றனர். இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
















