இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் இறுதியில் இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாட உள்ளது.
அதன்படி டி20-யின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும், ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் கேப்டன்களாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார். தற்போது இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.