பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ‘கிளாடியேட்டர் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது .
கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘கிளாடியேட்டர்’ திரைப்படம், உலகம் முழுவதும் சுமார் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது.
கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கிளாடியேட்டர் 2’ படத்தினை ரிட்லி ஸ்கார் தற்போது உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
வருகிற நவம்பர் 15-ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘கிளாடியேட்டர் 2’ திரைப்படம் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.