இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள “தங்கலான்” படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் டிரைலர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.