கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே வலியுறுத்தினார்.
மகரிஷி வால்மீகி பழங்குடியின வாரியத்தில் 187 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சித்தராமையா அமைச்சரவையில் அங்கம் வகித்த நாகேந்திராவுக்கு சொந்தமான இடங்கள் உள்பட நான்கு மாநிலங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே, மகரிஷி வால்மீகி பழங்குடியின வாரியத்துக்கு சொந்தமான 187 கோடி ரூபாயை தெலங்கானா பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
இதற்குப் பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலகி, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தெரிவித்தார்.