இந்தியாவில் தனது முதல் மின்சார காரை பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஸியோமி நிறுவனம் இந்திய சந்தையில் கால்பதித்து 10வது ஆண்டை கொண்டாடுவதன் நினைவாக, ஸியோமி SU7 என்ற தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தூரம் வரை பயணிப்பதுடன், மணிக்கு 265 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கார் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.