டெல்லியில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பெய்த மழை இதமான சூழலை உருவாக்கியது. துவாரகாவில் கனமழையால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வாகனங்கள் மிதந்து சென்றன.
உத்தர பிரதேச மாநிலம் ஹபூரில் டெல்லி- லக்னோ நெடுஞ்சாலையில், கனமழை காரணமாக சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
அஸ்ஸாமில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக திப்ரூகர் மாவட்டம் கோவங் பகுதியில் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீட்டின் மாடியில் பொதுமக்கள் தஞ்சமடைந்தனர். வெள்ளம் இன்னும் வடியாததால், அவர்களது இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.