இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஆஸ்திரிய தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டின் ஆட்டோமொபைல், எரிசக்தி, என்ஜினீயரிங் தொழில் நிறுவன அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது இந்தியா அடுத்த ஐந்து ஆண்டில் உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறப் போவதால், இந்தியாவில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி முதலீடு செய்ய வருமாறு அவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்தியாவில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சீர்திருத்த முடிவுகளால் வணிகம் செய்வதற்கு உகந்த சூழல் நிலவுவதாகவும், இதன்மூலம் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவுக்குப் படையெடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஆஸ்திரியா அதிபர் கார்ல் நெஹம்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.