விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வான தி.மு.கவை சேர்ந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதால் அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் காலைமுதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களித்தனர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.