விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவினர்- போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
துறவி எனும் இடத்தில் உள்ள 222 – வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பாமகவினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாமகவினர் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.