பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற பிரதமர் மோடிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகள், உலகளவில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கையும், பிரதமர் மோடியின் பங்களிப்பையும் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விருதுகள் பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தையும், தொலைநோக்கு பார்வையையும் அங்கீகரிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு விருதுகளை எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார்.