தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் தமிழ்நெஞ்சம் அவர்கள் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் தங்களை பாஜகவில் இணைத்துகொண்டனர்.
அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வதோடு வலிமையான பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகம் என்ற நமது குறிக்கொளை நோக்கி உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
















