சென்னை ஆவடி பேருந்து நிலையம் அருகே எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக சாலையில் விரிசல் ஏற்பட்டது.
ஆவடியில் உள்ள தனியார் நிறுவனம், எரிவாயு வினியோகம் செய்ய எரிவாயு குழாய்களை மண்ணில் புதைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக சாலையில் விரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தனியார் நிறுவனத்துக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
















