பட்டயக் கணக்காளர் இடைநிலை மற்றும் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
டெல்லியை சேர்ந்த சிவம் மிஸ்ரா 500 மதிப்பெண்களுக்கு 83.33 சதவீத மதிப்பெண் பெற்று சிஏ இறுதித் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
வர்ஷா அரோரா 480 மதிப்பெண் பெற்று 2-ஆம் இடம்பிடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த கிரண் மன்றல் மற்றும் கில்மன் சாலிம் ஆகியோர் 3-ஆம் இடம்பிடித்துள்ளனர்.
சிஏ இடைநிலைத் தேர்வில் பிவாடியை சேர்ந்த குஷாக்ரா ராய் 89.67 சதவீத மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். சச்சின் காரியா மற்றும் யோக்யா லலித் ஆகியோர் தலா 89.67 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
இதேபோல மஞ்சித் சிங் பாட்டீயா மற்றும் ஹிரேஷ் காஷிராம்கா ஆகியோர் தலா 86.50 சதவீத மதிப்பெண்களுடன் 3-ஆம் இடம் பெற்றனர்.
சிஏ இன்டெர் குரூப் 1 எனப்படும் இடைநிலைத் தேர்வில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 764 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 27.15 சதவீதம் பேர்.
அதாவது 31 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றனர். சிஏ இன்டெர் குரூப் 2 தேர்வில் 13 ஆயிரத்து 8 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரு தேர்விலும் பங்கேற்றவர்களில் 11 ஆயிரத்து 41 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.