குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக முடிவு எடுக்க பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டுமென மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா வலியுறுத்தினார்.
ஆண்டுதோறும் உலக மக்கள்தொகை தினம் ஜூலை 11-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா,
இணையமைச்சர் அனுபிரியா படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் ஜெ.பி. நட்டா, குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக முடிவு எடுக்க பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும், தேவையற்ற கருவுறுதலால் பெண்கள் பாதிப்படைய கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறிய அவர், கருவுறுதல் வீதத்தைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.