அரியலூரில் உலக மக்கள்தொகை தினத்தையொட்டி மருத்துவ துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து குழந்தை திருமணத்தை தடுப்போம், நாம் இருவர் நமக்கு ஒருவர் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.