சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளாததால், மடிப்பாக்கம் சதாசிவம் சாலைகளில் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக காட்சியளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள், கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி மற்றும் தொலைத்தொடர்பு வயர்கள் பதிக்கும் பணி என அனைத்து பணிகளும் நடைபெற்றது.
ஆனால் பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் ஒப்பந்ததாரர்கள் மெத்தனமாக செயல்படுவதால் சாலைகள் முழுவதும் சேதமடைந்து சேரும் சகதியுமாக காட்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னையில் 93 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளதால், மழைநீர் தேங்காது என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், மடிப்பாக்கம் சதாசிவம் சாலைகளில் மழைநீர் தேங்கி சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.