புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பாகுபாடியின்றி அதிகாரத்தை பகிர்ந்து வழங்க வேண்டும் என அதிருப்தி பா.ஜ.க மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி சட்டபேரவையில் உள்ள பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-க்கள் சிவசங்கர், அங்காளன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஜான்குமார்,
தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் பாஜக எம்எல்ஏ-க்களுக்கும் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.
முதலமைச்சர் திட்டமிட்டு பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக ஆதரவு எம்எல்ஏக்களை பழிவாங்குவதாகவும், அவரை ஆதரிக்கும் சுயேட்சைகளுக்கு மட்டும் வேண்டியதை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து பாஜக தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும், கட்சி தலைமை எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவோம் என்றும் ஜான்குமார் தெரிவித்தார்.