சென்னை பூந்தமல்லியில் உள்ள தனிக்கிளை சிறையில், கைதியின் அறையில் இருந்து செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தச் சிறையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறை கண்காணிப்பு அதிகாரி தலைமையில் கைதிகளின் அறையில் சிறை காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சா வழக்கில் கைதான மாறன் என்பவரது அறையில் இருந்து செல்போன், சிம் கார்டு, இரண்டு பேட்டரிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.