நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மறு உத்தரவு வரும்வரை வீடுகளை காலி செய்ய வேண்டாம் என பிபிடிசி நிர்வாகம் அறிவித்ததால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை நடத்தி வரும் தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் குத்தகைக் காலம் வரும் 2028ம் ஆண்டில் நிறைவடைகிறது. இதனால் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெற நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்துகொடுக்கும் வரை அவர்களை வெளியேற்ற கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து மறு உத்தரவு வரும்வரை தொழிலாளர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது