ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடாளுமன்றத் தலைவர்களின் 10-ஆவது மாநாட்டில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பங்கேற்றார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்தக் கூட்டமைப்பின் 10-ஆவது நாடாளுமன்றத் தலைவர்கள் மாநாடு ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. இதில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பங்கேற்று இந்திய ஜனநாயகத்தின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்.