மும்பையில் சொகுசு கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில், சிவசேனா பிரமுகர் மகனையும், கார் ஓட்டுநரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை ஓர்லி பகுதியில் அதிவேகமாகச் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஷிண்டே சிவசேனா அணியை சேர்ந்த ராஜேஷ் ஷா மகன் மிகிர் ஷா, அவரது கார் ஓட்டுநர் ராஜரிஷி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சிவ்ரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.