சென்னை வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை செல்லும் பிரதான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
வேளச்சேரியில் இருந்து மேடவாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் காலை 8 மணி முதல் 11 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இதனால் பணிக்கு செல்லும் மக்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வாகன ஓட்டிகள் சிலர் ஆபத்தை உணராமல் எதிர் திசையில் பயணிப்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
மேலும் இந்த சாலையில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்த வேண்டுமெனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.