நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய நபரை பாட்னாவில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
பீகார் மாநிலம் நாளந்தாவை சேர்ந்த ராக்கி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவான அவரை பாட்னா, கொல்கத்தா உள்ளிட்ட நான்கு நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் தேடி வந்தனர். இந்த நிலையில், அவரது மனைவி அனுப்பிய மெயில் மூலம் அதன் ஐபி முகவரியை பயன்படுத்தி, பாட்னாவில் தலைமறைவாக இருந்த ராக்கியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ராக்கியை 10 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.