சாக்கடை நதியில் நீச்சல் போட்டி? ஒலிம்பிக் வீரர்கள் அதிர்ச்சி!
Oct 26, 2025, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாக்கடை நதியில் நீச்சல் போட்டி? ஒலிம்பிக் வீரர்கள் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Jul 13, 2024, 07:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பாரீஸின் செய்ன் நதியில் கழிவுநீர் அதிகம் கலந்துள்ளதால், பாக்டீரியாக்களின் அளவு அதிகரித்துள்ளது. மேலும், பொது சுகாதாரத்தில் போதிய கவனம் செலுத்தாத அரசுக்கு எதிராக செய்ன் நதியில் மலம் கழிக்கும் போராட்டம் நடத்த இருப்பதாக பாரீஸ் நகர மக்கள் அறிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகப் புகழ் பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. வரும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

பாரீஸின் ஈபிள் கோபுரம் அருகில் இருக்கும் செய்ன் நதியில் பிரம்மாண்ட படகு அணிவகுப்புடன் தொடக்க விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

செய்ன் நதியில், இந்த ஆண்டுக்கான முதல் ஒலிம்பிக் போட்டியாக , ஜூலை 30 ஆம் தேதி காலை 1.5 கிலோ மீட்டர் துாரத்திற்கு நீச்சல் உட்பட ஆண்களுக்கான டிரையத்லான் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கு அடுத்த நாள் ஜூலை 31ம் தேதி பெண்களுக்கான டிரையத்லான் போட்டி நடைபெறுகிறது.

செய்ன் நதி எவ்வளவு அழுக்காக இருந்தாலும், செய்ன் இல்லாமல் பாரிஸ் இல்லை என்பது பழமொழி. செய்ன் நதி 780 கிலோமீட்டர் நீளமுடையது. பாரீஸ் ஈபிள் கோபுரத்தின் புகைப்படங்களை எடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அழகிய பின்னணியாக இருக்கிறது இந்த செய்ன் நதி. பாரிஸின் உயிர்நாடியாகவும் இந்த செய்ன் நதி திகழ்கிறது.

பல நூற்றாண்டுகளாக, செய்ன் நதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் ஒரு முக்கியமான நீர் ஆதாரமாகவும், வர்த்தக பாதையாகவும், விளங்கி வருகிறது. பிரான்ஸின் கலாச்சார சிறப்புடன் திகழும் செய்ன் நதிக்கரை 1991ம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

1900ம் ஆண்டு பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், பல்வேறு தரப்பட்ட நீச்சல் மற்றும் நீர் சார்ந்த போட்டிகள் செய்ன் நதியில் தான் நடத்தப்பட்டன. பிறகு, செய்ன் நதியின் நீர் சுகாதாரம் கேள்விக்குள்ளானதால், இந்த நதியில் நீந்துவது தடை செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக தடை நீடித்துள்ள நிலையில் , 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை செய்ன் நதியில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், பிரான்ஸ் அரசும் முடிவெடுத்தன.

முன்னதாக, 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் மாசுபடுத்தப்பட்ட செய்ன் நதியை சுத்தப் படுத்தும் பணிகள், பிரான்ஸ் அரசால் மேற்கொள்ளப் பட்டது. அதன்படி பாரீசில், மழைநீரைத் தனியாக சேமிக்கவும், செய்ன் நதியில் அழுக்காவதைத் தடுக்கவும், ஆஸ்டர்லிட்ஸ் பேசின் எனப்படும் நிலத்தடி சேமிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் படுகை 46,000 கன மீட்டர் தண்ணீரைத் தாங்கக் கூடியயதாக அமைக்கப்பட்டுள்ளது. இது சுமார் ஒரு டஜன் ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவிலான தண்ணீரை சேமிக்கும் என்று கூறப் படுகிறது. இந்த படுகையில் சேகரிக்கப்படும் இந்த மழைநீர் மீண்டும் செயினில் விடப்படுவதற்கு முன் சுத்திகரிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 29ம் தேதி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஒலிம்பிக் போட்டிகளுக்காக செய்ன் நதி எவ்வாறு சுத்தம் செய்யப்பட்டது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் தானே , செய்ன் நதியில் நீந்துவதாக உறுதியளித்திருந்தார். அதிபரைப் பின்பற்றி பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோவும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக செய்ன் நதியில் தானும் குளிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

கடந்த கோடையில் செய்ன் நதியில் சாக்கடை நீர் கலந்த பிரச்சனை காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு முந்தைய நீச்சல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் தான், செய்ன் நதியில் போட்டிக்காக நீந்துவது , விளையாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்குமா ? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் பெய்த கனமழைக்குப் பிறகு, செய்ன் நதியில் சுகாதாரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. நதியில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

பாரீஸ் நகர அரசு அதிகாரிகள் பலமுறை நதியின் நீர் சுத்தமானதாக உள்ளதாக உறுதியளித்த போதிலும் அதை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. செய்ன் நதி தொடர்ந்து மாசுபடுவதால் விரக்தியடைந்த பாரீஸ் நகர மக்கள், வித்தியாசமான போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதாவது, செய்ன் நதியை முறையாக அரசு தூய்மை செய்யவில்லையெனில், ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன் நதியில் மலம் கழிக்கும் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் உலகநாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

செய்ன் நதி குளிப்பதற்கும் நீந்துவதற்கும் தரமற்றதாகவும், ஒலிம்பிக் போட்டி நடத்த பொருத்தமற்றதாகவும் இருக்கும் பட்சத்தில், செய்ன் நதிக்குப் பதிலாக வேறு இடத்தில் திட்டமிட்டப் படி போட்டிகள் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்க அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Swimming competition in the sewer river? Olympic players shocked!
ShareTweetSendShare
Previous Post

ஆடி காரில் சைரனுடன் பந்தாவாக உலா சிக்கிய IAS அதிகாரி!

Next Post

MAKE FOR THE WORLD இந்தியாவில் உருவாகும் சீன ரயில்!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies