டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மேற்கு வங்க சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சந்தித்து பேசினார்.
அப்போது மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு வருவதாகவும் சுவேந்து அதிகாரி முறையிட்டார்.
மேற்கு வங்க மாநிலம் சோப்ராவில் கணவன் முன்பாகவே மனைவி தாக்கப்பட்டது, கூச் பெஹரில் பாஜக பெண் நிர்வாகி மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களை இதற்கு உதாரணமாக அமித் ஷாவிடம் சுவேந்து அதிகாரி தெரிவித்தார். முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்து பேசினார்.