அசாதாரண வீரம், அடங்காத துணிச்சல் மற்றும் தேசபக்தியின் உண்மையான உருவகமாக அழகு முத்துக்கோன் திகழ்ந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் விடுதலை போராட்டத்தின் தீயை மூட்டி எண்ணற்ற மக்களை உற்சாகப்படுத்தியவர் அழகு முத்துக்கோன் எனக் குறிப்பிட்டுள்ளார். நீதி மற்றும் சுதந்திரம் மீதான அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் ஒரு உத்வேகமாக அமையும் என தெரிவித்துள்ள அவர், வலிமையான மற்றும் சுயசார்பு பாரதத்தை உருவாக்க ஒன்றாகப் பாடுபடுவோம் எனவும் பதிவிட்டுள்ளார்.