தொழில்துறையில் இந்தியா விரைவில் முதலிடம் பெறும் என ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொழில்துறை கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய அவர், ஆந்திரத்தில் தாம் தொழில்துறையை மேம்படுத்தியதாகவும், இதற்காக டாவோஸ் நகருக்கு ஒன்பது முறை பயணம் செய்ததாகவும் கூறினார்.
இந்தியாவை வளமான தேசமாக்க பிரதமர் மோடி உழைப்பதைப் போல, ஆந்திரத்தை மேம்படுத்த தானும் பாடுபடுவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தொழில்துறையில் இந்தியா விரைவில் முதலிடம் பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், நாட்டிலேயே முதல் பசுமை விமான நிலையம் ஹைதராபாத்தில் திறக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.