பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ கால் மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் தொசிதா லட்சுமி என்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். இந்த வெற்றி மாணவிக்கு கிடைத்த முதல் படிக்கல் எனவும் தொடர்ந்து வெற்றிகள் குவிய வாழ்த்துவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.