காமராஜர் இருந்த இடத்தில் முன்னாள் ரவுடியை தலைவராக கொண்டுவருவதற்கு பா.சிதம்பரம் தான் வழிவகுத்துள்ளார் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி நகரில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
சத்தியமூர்த்தி பவனில் உட்கார்ந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். வேலுசாமி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆறு அறிவு இல்லாத மனிதன் அவர்.
அவர் பேசிய பேச்சு ப. சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தான் பொருந்தும் எனத் தெரிவித்தார்.
தமிழக தலைவர் அண்ணாமலை உலக வரலாறு, பொருளாதாரம், ஆன்மீகம் பற்றி எல்லாம் பேச தெரியும், வேற யாருக்கு இவரை போல் பேசுவார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
பாஜக சார்பில் தேசிய பட்டியலில் ஆணையர் தலைவரிடம் டில்லியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செல்வபெருந்தகை முன்னாள் ரவுடி பட்டியலில் இருந்தவர் ஆகவே அவருக்கு எல்லாம் தெரியும் என நினைக்கின்றேன்
பாஜகவில் பட்டியல் அணியில் பலரும் பல பதவியில் உள்ளனர். எல். முருகன் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என செல்வபெருந்தகை தெரிந்து கொள்ள வேண்டும்.
செல்வபெருந்தகை அரசியல் கருத்தை பேசாமல் அண்ணாமலை மீது அவதுாராக பேசி வருகிறார்.
செல்வபெருந்தகை , முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலை மீது தனி மனித தாக்குதலாக பேசி வருகின்றனர்.
அண்ணாமலை பற்றி பேச திமுகவின் வாக்குவங்கி குறையும் ஒவ்வொரு வீட்டிலும் அண்ணாமலை மீது பாசம் வைத்து உள்ளனர்.
எங்களுக்கும் உருவ பொம்மை எரிக்க தெரியும். பாஜகவுக்கு என சட்டம் என திமுக செயல்படுகிறது. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என எப்போதும் சொல்லி வருகின்றனர், எங்களுக்கு கவலை இல்லை அதிமுக இல்லாமல் பாஜக வெற்றி பெரும் என தெரிவித்தார்.