நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை நீதிமன்றக் காவலில் வைக்க தேவையில்லை என நீதிபதி தெரிவித்ததை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக அரசு மீதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும் அவதூறாக பேசியதாக, சாட்டை துரைமுருகனை சைபர் கிரைம் போலிசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் திருச்சி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சுவாமிநாதன்,சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்ததோடு, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க தேவையில்லை என்று கூறி விடுவிக்க உத்தரவிட்டார்.