அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துணை அதிபர் கமலா ஹாரிஸை தவறுதலாக துணை அதிபர் டிரம்ப் என குறிப்பிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயகக் கட்சி சார்பாக அதிபர் ஜோ பைடன் மீண்டும் களமிறங்கும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, முன்னாள் அதிபர் டிரம்புடன் நடைபெற்ற விவாதத்தில் ஜோ பைடன் தெளிவில்லாமல் பேசியதைத் தொடர்ந்து, அவர் அதிபர் பதவிக்கான போட்டியிலிருந்து விலக வேண்டுமென ஜனநாயகக் கட்சியினரே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் என கூறுவதற்கு பதிலாக, துணை அதிபர் ட்ரம்ப் என தெரிவித்தார். முழு தகுதியும் இருப்பதாலேயே ட்ரம்பை துணை அதிபராகத் தேர்ந்தெடுத்ததாக ஜோ பைடன் கூறினார்.