வேலூர் அருகே ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சைணகுண்டா சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 12 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.