திருச்சி விமான நிலையத்தில் சுமார் ஒரு கிலோ தங்கத்தை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமான நிலையம் வந்தது. அதில் வந்த இரு பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.
அப்போது இரு பயணிகள் மறைத்து எடுத்து வந்த சுமார் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 72 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.