தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அரசு பேருந்து இயக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஒட்டனூரில் இருந்து நெருப்பூர் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த 9-ம் தேதி ஒட்டனூர் முதல் நெருப்பூர் வரையுள்ள வழித்தடம் உள்பட மொத்தம் 3 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆனால் மறுநாள் முதல் அந்த வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளதால், அரசு பேருந்தை முறையாக இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.