தென்காசியில் பெய்த திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயம் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
கீழப்பாவூர், வடகரை, அச்சம் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பெய்த கனமழையால், ஆயிரப்பேரி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயம் பயிர்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது. அரச உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.