நீலகிரி மாவட்டம், கூடலூரில் சாலையோர கடையில் கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கடை வைத்திருக்கும் சிலர், கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சத்யராஜ் என்பவரின் சாலையோர கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்காக 150 கிராம் கஞ்சாவை பாக்கெட்டுகளாக தயார் செய்து வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து சத்யராஜை போலீசார் கைது செய்தனர்.