புதுக்கோட்டை அருகே என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியை சேர்ந்த ரவுடி துரைசாமி, புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் உள்ள காட்டுப் பகுதியில் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.
காட்டுப்பகுதியில் மறைந்திருந்த அவரை பிடிக்க முயற்சித்தபோது காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயற்சித்ததால் துரைசாமியை என்கவுண்ட்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் துரைசாமியை வரவழைத்து சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், துரைசாமியோடு சென்ற பிரதீப் குமார் என்பவரைக் காணவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.